25 பெண்களிடம் கோடிக்கணக்கில் மோசடி- நடவடிக்கை எடுக்காததால் பெண்கள் தற்கொலை முயற்சி

25 பெண்களிடம் கோடிக்கணக்கில் மோசடி- நடவடிக்கை எடுக்காததால் பெண்கள் தற்கொலை முயற்சி
25 பெண்களிடம் கோடிக்கணக்கில் மோசடி- நடவடிக்கை எடுக்காததால் பெண்கள் தற்கொலை முயற்சி

குமரி மாவட்டம் கடையாலு மூடு பகுதியில் 25 த்திற்கும் மேற்பட்ட பெண்களிடம் கோடிக்கணக்கில் பணமோசடி செய்த தம்பதி வீட்டின் முன்பு பெண்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குமரி மாவட்டம் கடையாலுமூடு செக்கட்டிவிளை பகுதியைச் சேர்ந்த மேரி ஜெயராணி என்பவர் மகளின் திருமணத்திற்காக வங்கியில் பணம் சேமித்து வந்துள்ளார். அவரிடம் கடந்த பல வருடங்களுக்கு முன்னர் அவசரத் தேவைக்காக ஆகாஷ் - கிறிஸ்டினாள் தம்பதி எழுத்து மூலம் வட்டிக்குப் பணம் வாங்கியதாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் இந்தத் தம்பதி இதே போன்று 25 க்கும் மேற்பட்ட பெண்களிடம் கோடிக்கணக்கில் இதே போன்று பணம் வாங்கியது தெரியவந்தது. இந்நிலையில் பெண்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

ஆனால், புகார் குறித்து காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சமப்ந்தப்பட்ட பெண்கள் ஆகாஷ் - கிறிஸ்டினாள் தம்பதியிடம் கேட்டதாகவும், அதற்கு அவர்கள் நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்ளுங்கள் எனக் கூறியதாகச் சொல்லப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த பெண்கள், அவர்கள் வீட்டின் முன்பே மண்ணெண்ணெய் ஊற்றித் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தற்கொலைக்கு முயன்றவர்களை தடுத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com