வனத்துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி - நாம் தமிழர் கட்சி நிர்வாகி உள்பட இருவர் மீது புகார்

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே வனத்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகி உள்பட 2 பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட இளைஞர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
புகார் தெரிவித்தவர்கள்
புகார் தெரிவித்தவர்கள்pt desk

கொங்கம்பாளையத்தை சேர்ந்த கோகுல் மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரும் பழச்சாறு கடையில் பணியாற்றுகின்றனர். கடந்த 2018 ஆம் ஆண்டு கோகுலின் உறவினரும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியுமான மூர்த்தி என்பவரும், பத்திரிகையாளர் தமிழ்வாணன் என்பவரும் இணைந்து கோகுல் மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரிடமும் வனத்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளனர். அதற்காக அவர்களிடமிருந்து 3 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பெற்றுள்ளனர்.

நாம் தமிழர் கட்சி நிர்வாகி மூர்த்தி
நாம் தமிழர் கட்சி நிர்வாகி மூர்த்திpt desk

இதற்கிடையில் வனத்துறை பணிக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டதை அறிந்த இளைஞர்கள், பணத்தை திருப்பிக் கேட்டபோது ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணத்தை தந்துள்ளனர். மீதமுள்ள பணத்தை தர மறுத்துள்ளனர். இதனால் மூர்த்தி மற்றும் தமிழ்வாணன் ஆகியோரிடமிருந்து பணத்தை மீட்டு சட்டபடி நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com