சென்னையில் அருகே பம்மலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை பல்லாவரம் அருகே பம்மல் பகுதியில் கிருஷ்ணாநகர் ரங்கநாதன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தாமோதரன். இவர் தனது தாய் சரஸ்வதி, மனைவி தீபா, குழந்தைகள் ரோஷன், மீனாட்சி ஆகியோரை கழுத்தறுத்து படுகொலை செய்யதுள்ளார். நான்கு பேரையும் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தனது குடும்பத்தினரை கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்ததுள்ளது. நான்கு பேர் உயிரிழந்த நிலையில் தாமோதரன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.