சடலத்தை மீட்டு வந்த போலீசார்
சடலத்தை மீட்டு வந்த போலீசார்PT WEB

அரியலூர்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் சடலமாக மீட்பு; விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

அரியலூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன் உட்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published on

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள வளவனேரி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவருடைய மனைவி பானுமதி. ராஜா வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். ராஜாவின் மனைவி பானுமதி, தனது மூன்று மகன்களுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், பானுமதியின் வீடு, கடந்து இரண்டு நாட்களாகப் பூட்டியே கிடந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் பானுமதி வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது வீடு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. பின்னர் கதவை உடைந்து கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது பானுமதி மற்றும் அவருடைய 3 குழந்தைகள் ஆகிய 4 பேரும் சடலமாகக் கிடந்துள்ளனர்.

சடலத்தை மீட்டு வந்த போலீசார்
”உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தால்..”-தீர்த்தவாரி உற்சவ துயர சம்பவம் குறித்து பொதுமக்கள் கருத்து

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், 4 பேரின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், நடத்திய முதற்கட்ட விசாரணையில், பானுமதி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும், அதற்காக மாத்திரைகள் உட்கொண்டு வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. மேலும் உயிரிழந்த குழந்தைகளின் உடலுக்கு அருகில் ரத்தக்கறை படிந்த குத்து விளக்குகள் கிடந்துள்ளன. இதனால் தாய் பானுமதி, 3 குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு, பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளாரா என போலீசார் சந்தேகமடைந்துள்ளனர்.

உயிரிழந்த தாய் குழந்தைகள்
உயிரிழந்த தாய் குழந்தைகள்

பின்னர் இது தற்கொலையா? அல்லது கொலையா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலத்தை மீட்டு வந்த போலீசார்
குன்றத்தூர் | நடத்துநரை கட்டையால் அடித்த மேலாளர்.. மேனேஜரை இரும்பு ராடால் அடித்த நடத்துநர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com