”எங்களிடம் நிர்வாணக் கண்ணாடி இருக்கு; அதை போட்டு பார்த்தா..” - சிக்கிய மோசடி கும்பல்!

நூதன மோசடியில் ஈடுபட்ட 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குபாய்ப், இர்ஷாத்,ஜித்து, சிவா
குபாய்ப், இர்ஷாத்,ஜித்து, சிவாPythiya thalaimurai

சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் சந்தேகப்படும்படியான வகையில் 4 இளைஞர்கள் தங்கி இருப்பதாக காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் நேற்று இரவு அந்த அறைக்குச் சென்று சோதனை மேற்கொண்டனர். அவர்களது அறையை சோதனை செய்தபோது ஏர் பிஸ்டன் துப்பாக்கி, 8 தோட்டாக்கள், கை விலங்கு மற்றும் கோபுரகலசம், கருப்பு அரிசி, போலி அடையாள அட்டைகள், நிர்வாணமாகக் காட்டும் போலி கண்ணாடிகள் ஆகியவற்றை இருப்பதை கண்டுபிடித்தனர்.

பின்னர் அனைத்துப் பொருட்களையும் பறிமுதல் செய்த போலீசார் நான்கு பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், கேரளாவைச் சேர்ந்த குபாய்ப், ஜித்து, இர்ஷாத் மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த சிவா ஆகியோர் என தெரியவந்தது.

போலீசார் அவர்கள் நடத்திய விசாரணையில் சினிமா பட பாணியில் தொழில் அதிபர்கள் மற்றும் பணக்காரர்களை குறிவைத்து நூதன மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், அவர்களிடம் கோபுர கலசங்கள் கண்டெடுக்கப்பட்டதால் அவற்றை கோயில்களில் இருந்து திருடினார்களா என்கிற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com