3 ஆண்டுகளாக தொப்பூர் கணவாய் சாலையில் தொடரும் விபத்துக்கள் - உயிரிழப்புகள் விபரம்!

3 ஆண்டுகளாக தொப்பூர் கணவாய் சாலையில் தொடரும் விபத்துக்கள் - உயிரிழப்புகள் விபரம்!
3 ஆண்டுகளாக தொப்பூர் கணவாய் சாலையில் தொடரும் விபத்துக்கள் - உயிரிழப்புகள் விபரம்!

தொப்பூர் கணவாய் பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளில் நேர்ந்த விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த விவரங்களைப் பார்க்கலாம்.

சேலம் தர்மபுரி மாவட்ட எல்லையான தொப்பூர் கண்வாய் சாலையில் வேகமாக வந்த கனரக வாகனமானது முன்னால் நின்று கொண்டிருந்த வாகனங்களின் மீது மோதியது. இந்தக்கோர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த நிலையில் பலர் படுகாயம் அடைந்தனர்.

விபத்திற்கான காரணம் : -

அப்பகுதியிலுள்ள சுங்கச்சாவடியில் இருந்து 8 கிலோமீட்டர் தூரம் வரையில் இருக்கும் சாலையானது அதிக விபத்துக்கள் நிகழும் இடமாக உள்ளது. அதிலும், குறிப்பிட்ட 4 கிலோமீட்டர் மிக ஆபத்தானப் பகுதியாகப் கருதப்படுகிறது. காரணம் அந்த 4 கிலோ மீட்டர் சாலையானது கீழ் முகமாக இறங்குவதால் அங்கு வரும் வாகனங்கள் அதிவேகமாக செல்லுவதாகவும், இதுவே அப்பகுதியில் அடிக்கடி விபத்து நிகழ்வதற்கு காரணமாகவும் சொல்லப்படுகிறது.

தொப்பூர் கணவாயில் நடந்த விபத்துக்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் விபரங்கள்:-

2018 ஆம் ஆண்டு சிறு விபத்துக்கள் உட்பட 90 விபத்துக்கள் நிகழ்ந்துள்ள நிலையில், அதில் 3 நபர்கள் உயிரிழந்தாகச் சொல்லப்படுகிறது.

2019 ஆம் ஆண்டு 110 விபத்துகள் நிகழ்ந்துள்ளதாகவும், அதில் 10 நபர்கள் உயிரிழந்ததாகவும் சொல்லப்படுகிறது.

2020 ஆம் ஆண்டு ( அண்மையில் நடந்த விபத்து உட்பட) 10 நபர்கள் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com