ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் - 4 காவல் ஆணையர்கள் மாற்றம்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் - 4 காவல் ஆணையர்கள் மாற்றம்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் - 4 காவல் ஆணையர்கள் மாற்றம்
Published on

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை நியாயமாக நடத்த தேர்தல் ஆணையம் நான்கு காவல் உதவி ஆணையர்களை மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது

திருவொற்றியூர் உதவி ஆணையர் குமார், ராயபுரம் உதவி ஆணையர் ஸ்டீபன், வண்ணாரப்பேட்டை உதவி ஆணையர் ஆனந்தகுமார், எம்.கே.பி.நகர் உதவி ஆணையர் ஜெய்சிங் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையின் பேரில் தமிழக டிஜிபி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதற்கு முன்னர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நியாயமாக நடத்த சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் மற்றும் தேர்தல் அதிகாரி பத்மஜா தேவி ஆகியோரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று திமுக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தது. இதனைத் தொடர்ந்து பத்மஜாதேவி மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக பிரவீண் நாயர் நியமிக்கப்பட்டார். சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் மாற்றப்பட்டு கரண்சின்ஹா அந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com