சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக 4 பேர் பதவியேற்பு

சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக 4 பேர் பதவியேற்பு
சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக 4 பேர் பதவியேற்பு

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 4 கூடுதல் நீதிபதிகளும் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய கூடுதல் நீதிபதிகளாக சுந்தரம் ஸ்ரீமதி, டி.பரத சக்கரவர்த்தி, ஆர்.விஜயகுமார் மற்றும் முகமது ஷபிக் ஆகியோரை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த நான்கு புதிய கூடுதல் நீதிபதிகள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

நீதிபதி சுந்தரம் ஸ்ரீமதி சென்னை உயர் நீதிமன்றத்தின் 13வது பெண் நீதிபதியாவார். பின்னர், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் மற்றும் பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் புதிய நீதிபதிகளை வரவேற்று பேசினர். வரவேற்புக்கு பதிலளித்து புதிய நீதிபதிகள் உரையாற்றினர்.

புதிய நான்கு நீதிபதிகளுடன் சேர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது. 15 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com