\
கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தார் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்!

கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தார் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்!

கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தார் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்!
Published on

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தார்.

கொரோனா 2 ஆம் அலையில் பலதரப்பட்ட மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒரு நாளைக்கு 3 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.  ஒரு நாளைக்கு 3 ஆயிரம் பேருக்கு மேல் இறப்பு விகிதமும் எகிறிச் செல்கிறது. இரண்டாம் அலையில் பல அரசியல் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

அந்த வரிசையில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கடந்த 6 ஆம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று கொரோனா தொற்றுலிருந்து குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com