முன்னாள் மத்திய அமைச்சர்  தலித் எழில்மலை மறைவு - கனிமொழி இரங்கல் 

முன்னாள் மத்திய அமைச்சர்  தலித் எழில்மலை மறைவு - கனிமொழி இரங்கல் 
முன்னாள் மத்திய அமைச்சர்  தலித் எழில்மலை மறைவு - கனிமொழி இரங்கல் 
முன்னாள் மத்திய அமைச்சர்  தலித் எழில்மலை இன்று அதிகாலை மாரடைப்பால் சென்னையில் காலமானார். 
 
முன்னாள் மத்திய சுகாதாரத்துறை  இணை அமைச்சர் தலித் எழில்மலை  இன்று அதிகாலை சென்னையில்  மாரடைப்பால் காலமானார்.அவருக்கு வயது 74. அவருக்கு முனிரத்தினம் என்கிற மனைவியும் மூன்று மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற  மக்களவைத் தேர்தலில் பாமக சார்பில்  சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்  வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் (தனிப்பொறுப்பு) சுகாதாரத்துறை இணை அமைச்சராக பணியாற்றினார். 
 
 
2001 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் திருச்சி பொதுத் தொகுதியில் அதிமுக சார்பில்  போட்டியிட்டு வெற்றி பெற்றார். அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக அவருடைய உடல் சொந்த ஊரான மதுராந்தகம் அருகே உள்ள இரும்பேடு கிராமத்தில் எளிய முறையில் இன்று மாலை 4 மணிக்கு  அவரது  வீட்டின் அருகில் உள்ள அவருக்குச் சொந்தமான தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
 
தலித் எழில்மலையின் இறப்புக்கு திமுக எம்பி கனிமொழி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டரில், “மத்திய சுகாதாரத்துறை முன்னாள் இணை அமைச்சர் தலித் எழில்மலை அவர்கள் உடல்நலக்குறைவால் காலமான செய்தியறிந்து வேதனையுற்றேன். டாக்டர் அம்பேத்கர் அவர்களின் கொள்கைகளில் பற்று கொண்டவர், தாழ்த்தப்பட்ட மக்களின் உயர்வுக்கு குரல் கொடுத்தவர். அவரது மறைவு, நிச்சயம் ஒரு பேரிழப்பு. அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்” என்று கனிமொழி குறிப்பிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com