ஜெ.வுடன் அமைச்சர்கள் இருந்ததாக கூறவில்லை - ராம மோகன் ராவ் விளக்கம்

ஜெ.வுடன் அமைச்சர்கள் இருந்ததாக கூறவில்லை - ராம மோகன் ராவ் விளக்கம்

ஜெ.வுடன் அமைச்சர்கள் இருந்ததாக கூறவில்லை - ராம மோகன் ராவ் விளக்கம்
Published on

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது மூத்த அமைச்சர்கள் அவருடன் இருந்தனர் என்று தான் சொன்னதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோக‌ன் ராவ் தெரிவித்துள்ளார். ஆறுமுகசாமி ஆணையத்தில் விளக்கம் அளிக்க வந்த ராம மோகன் ராவ் செய்தியாளர்களை சந்தித்த போது இதனை கூறினார். 

செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது அமைச்சர்கள் உடன் இருந்தனர் என்று நான் கூறியதாக தகவல் வெளியானது. பத்திரிகைகளில் வெளியான அந்த‌ தகவல் உண்மையானது அல்ல. ஜெயலலிதாவுடன் அமைச்சர்கள் இருந்தனர் என்று நான் கூறவில்லை. நான் சொன்ன தகவல்கள் ஆணையத்திடம் உள்ளது. தற்போது, ஆறுமுகசாமி ஆணையத்தில் விளக்கம் அளிப்பதற்காக வந்தேன். அமைச்சர்கள்‌ பார்த்தார்களா, ‌இல்லையா என நான் சொல்லவே இல்லை” என்று கூறினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com