‘நன்றி மறக்காத மாணவர்கள்’ - படித்த பள்ளிக்கு 8 லட்சத்தில் புதிய கட்டடம்

‘நன்றி மறக்காத மாணவர்கள்’ - படித்த பள்ளிக்கு 8 லட்சத்தில் புதிய கட்டடம்
‘நன்றி மறக்காத மாணவர்கள்’ - படித்த பள்ளிக்கு 8 லட்சத்தில் புதிய கட்டடம்

மேலூர் அருகே, தாங்கள் கல்வி பயின்ற அரசுப் பள்ளிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, கிராம பொதுமக்கள் ஒன்றிணைந்து ரூபாய் 8 இலட்சம் மதிபீட்டில் புதியக் வகுப்பறையை கட்டிக்கொடுத்தனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது பழையூர்பட்டி. இங்கு 1953 ஆண்டு கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் செயல்பட்டு வருகிறது. இதில்  இப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வரும் நிலையில், எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி மாணவர்களின் சேர்க்கைக்காக போதிய கட்டட வசதி இல்லாமல் இருந்து வந்தது.

இதனைத் தொடர்ந்து, இந்தப் பள்ளியில் பயின்ற இந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் வெளிநாட்டு வாழ் கிராம இளைஞர்கள் உதவியுடன் ரூபாய் 8 இலட்சம் மதிப்பீட்டில் புதிய காங்ரீட் கட்டட வகுப்பறை கட்டப்பட்டது. இதனைத் தாங்கள் பயின்ற பள்ளிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவர்கள் கட்டிக் கொடுத்தனர். 


இதனைத்தொடர்ந்து கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டடம் ரிப்பன் வெட்டி திறந்து வைக்கப்பட்டது. இதன்மூலம் புதிய மாணவர்களின் சேர்க்கை அதிகரிப்பதுடன், மாணவர்கள் ஆர்வமுடன் கல்வியை கற்றுக்கொள்வார்கள், மேலும் பள்ளிக்கு தேவையான வசதிகளை செய்துதர இருப்பதாகவும்  அப்போது அவர்கள் தெரிவித்தனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com