\
தமிழக முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் காலமானார்..!

தமிழக முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் காலமானார்..!

தமிழக முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் காலமானார்..!
Published on: 

தமிழக முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் உடல்நலக் குறைவால் காலமானார்.

நெல்லை சேரன்மாதேவியை சேர்ந்தவர் பி.எச்.பாண்டியன். வயது 74. கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பி.எச்.பாண்டியனின் உயிர் பிரிந்தது.

கடந்த 1977, 1980, 1984, 1989 ஆகிய ஆண்டுகளில் அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டு வென்றவர். 1985-ஆம் ஆண்டு முதல் 1989-ஆம் ஆண்டு வரை தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராகவும் இருந்துள்ளார். 1999-ஆம் ஆண்டு நெல்லை மக்களவைத் தொகுதியிலிருந்தும் தேர்வாகியிருந்தார். பி.எச்.பாண்டியன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com