\
சுடுகாட்டில் சடலம் போல படுத்து விவசாயிகள் நூதனப் போராட்டம்

சுடுகாட்டில் சடலம் போல படுத்து விவசாயிகள் நூதனப் போராட்டம்

சுடுகாட்டில் சடலம் போல படுத்து விவசாயிகள் நூதனப் போராட்டம்
Published on

திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் சடலம் போல படுத்து அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

காவிரி மேலாண்மை‌ வாரியம் அமைக்க வலியுறுத்தி தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் பல்வேறு விதமான போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர். திருச்சி காவிரி ஆற்றில் சுடுமண்ணில் உடலை புதைத்து அண்மையில் அவர்கள் போராட்டம் நடத்தி இருந்த நிலையில், இன்று திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் சடலம் போல படுத்து போராட்டம் நடத்தினர். அப்போது காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த கெடு முடிவடைந்தும் மத்திய அரசு இன்னும் அமைக்கவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் என பலரும் போராடி வருகின்றனர். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com