தமிழ்நாடு
நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட மூவர் கொலை செல்லப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாநகராட்சியின் முதல் மேயராக கடந்த 1996-ஆம் ஆண்டு, திமுகவைச் சேர்ந்த உமா மகேஸ்வரி தேர்வு செய்யப்பட்டார். இதனிடையே உமாமகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன் மற்றும் பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் ஜூலை 23-ஆம் தேதி மதியம் அவர்களது வீட்டில் கத்தியால் குத்தி படுகொலை செய்யபட்டனர். இதற்காக அமைக்கப்பட்ட 3 தனிப்படைகள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், மூவர் கொலை செல்லப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வழக்கின் முக்கியத்துவம் கருத்தி சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.