OP Ravindranathpt desk
தமிழ்நாடு
இபிஎஸ் மீது செல்போனை எறிந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன் - முன்னாள் எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத்
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது செல்போனை எறிந்த செயலை வன்மையாக கண்டிப்பதாக ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், முன்னாள் எம்.பி.யுமான ஓ.பி.ரவீந்திரநாத் கூறியுள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், எடப்பாடி பழனிசாமியை அண்ணன் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் மீது செல்போனை எறிந்த செயல் முற்றிலும் அநாகரிகமானது எனவும், அரசியல் மற்றும் கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தாலும், நம்முடைய மரியாதையும், சீர்திருத்தமும் குறைந்துவிடக் கூடாது என்றும் கூறியுள்ளார்.
இச்சம்பவத்தில் ஈடுபட்டவர் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஓ.பி.ரவீந்திரநாத், தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
EPSptweb
"நாங்கள் பிச்சை எடுத்து நிதி கொடுத்தால்.."- கூண்டோடு வெளியேறும் கிருஷ்ணகிரி மாவட்ட நாதக நிர்வாகிகள்!
முன்னதாக, அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது, செல்போன் விழுந்தது. ஆர்வம் மிகுதியில் தொண்டரின் கை தவறி செல்போன் விழுந்ததாக விளக்கம் அளிக்கப்பட்டது.