திமுகவில் இருந்து பழ கருப்பையா விலகல்

திமுகவில் இருந்து பழ கருப்பையா விலகல்
திமுகவில் இருந்து பழ கருப்பையா விலகல்

முன்னாள் எம்.எல்.ஏ பழ கருப்பையா திமுகவில் இருந்து விலகியுள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், “ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போல் திமுக கட்சியை நடத்தும் விதம் கட்சியின் மீது பெரிய மனசலிப்பை உண்டாக்கி விட்டது. நேரடியாக ஸ்டாலினை பார்த்து திமுகவில் இருந்து விடை பெற்றேன். மாநிலங்களை பல கூறுகளாக உடைப்பது, இந்தியாவை இந்து என்னும் பொது அடையாளத்திற்குள் கொண்டு வருவது, என்பதெல்லாம் மொழிவழி, இன உணர்வை சிதைக்கின்றவை. திமுக இதன் ஆபத்தை உணரவில்லை. வெறும் ஒருநாள் அறிக்கையோடு இவையெல்லாம் முடிக்கின்றவை அல்ல.

லக்ஸ் சோப் விளம்பரம் போல் கட்சியை விளம்பரம் செய்ய முடியாது. கொள்கை சார்ந்து கட்சி நிற்க வேண்டும். பிடித்தால் மக்கள் ஏற்று கொள்வார்கள். ஜெயலலிதா, கருணாநிதி காலம் வரை இது போன்ற கார்ப்பரேட் ஆலோசனைகள் இடம் பெற்றது இல்லை . திமுக அறிவு இயக்கமாக இல்லை. ரஜினி படத்தில் நடித்தால் கூட அனைத்து விஷயங்களுக்கும் வெளியே வந்து கருத்து கூற வேண்டும்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த பழ.கருப்பையா தற்போது திமுகவில் இருந்து விலகியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com