தமிழ்நாடு
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 21 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 21 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறார்கள்.
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு திமுகவின் செந்தில் பாலாஜியிடம் தோல்வியை தழுவினார். இந்நிலையில் கரூரில் 20 இடங்களிலும் சென்னையில் ஒரு இடத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீரென சோதனை நடத்தி வருகின்றனர். போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது முறைகேட்டில் ஈடுபட்டதாக வந்த புகாரையடுத்து ரெய்டு நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.