விழுப்புரம்: தர்ணாவில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது

விழுப்புரம்: தர்ணாவில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது
விழுப்புரம்: தர்ணாவில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது
விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தர்ணாவில் ஈடுபட்டதற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சி.வி.சண்முகம் கைதை தொடர்ந்து அதிமுகவினர் காந்தி சிலை அருகில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் விழுப்புரத்தை மையமாகக்கொண்டு ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. அதற்கென துணைவேந்தரும் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் கல்லூரி செயல்பாடுகள் எதுவும் நடைபெறாத நிலையில், திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துடன் விழுப்புரம் - கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களை இணைத்து, சிதம்பரம் பல்கலைக்கழகத்தின் கீழ் இந்த மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் இனி தொடர்ந்து செயல்படும் என அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து அதிமுக சார்பில் நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில், மீண்டும் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி இன்று சி.வி.சண்முகம் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் திருவள்ளுவர் சிலை அருகில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். போராட்டத்தில் ஈடுபட்ட சிவி சண்முகத்தை அப்போது போலீசார் கைது செய்தனர்.
கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அவரை அடைத்து வைத்திருந்தனர். இதைத்தொடர்ந்து, அதிமுகவினர் விழுப்புரம் புதுச்சேரி சாலையில் காந்தி சிலை அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com