பாஜக கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரின் செல்போன் திருட்டு ?

பாஜக கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரின் செல்போன் திருட்டு ?
பாஜக கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரின் செல்போன் திருட்டு ?

ஓசூரில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் செல்போன் மாயமாகியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பாஜக சார்பில் ஒரே நாடு, ஒரே சட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜகவை சேர்ந்த மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி பங்கேற்று பேசினார். இந்தக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரான பாலகிருஷ்ண ரெட்டி பங்கேற்றார். இந்நிலையில் பாலகிருஷ்ணன் ரெட்டியின் செல்போன் கூட்டத்தில் மாயமானது. இந்த சம்பவம் அங்கு சலசலப்பை ஏற்படுத்தியது. செல்போனை யாரேனும் திடுடியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com