அரக்கோணம் தொகுதி முன்னாள் எம்.பி ஏ.எம்.வேலு காலமானார்

அரக்கோணம் தொகுதி முன்னாள் எம்.பி ஏ.எம்.வேலு காலமானார்

அரக்கோணம் தொகுதி முன்னாள் எம்.பி ஏ.எம்.வேலு காலமானார்
Published on

 அரக்கோணம் தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.வேலு உடல்நலக் குறைவால் காலமானார்.


ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரைச் சேர்ந்த அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.எம்.வேலு முதலியார் உடல்நலக்குறைவால் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

இவர் கடந்த 1980ல் காங்கிரஸ் சார்பிலும் 1996ல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பிலும் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். சோளிங்கர் சட்டமன்ற தொகுதியை பூர்வீகமாக கொண்ட இவர் 1947 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 ஆம் தேதி பிறந்தார். 1966ஆம் ஆண்டு சரஸ்வதி அம்மாளை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர்.

சோளிங்கர் பகுதியில் தொழிற்சாலைகள், பஸ் டிரான்ஸ்போர்ட் மற்றும் பள்ளி, கல்லூரிகளை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com