பெண்ணிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட முன்னாள் நீதிபதி
சொத்துகளை அபகரித்து கொலை செய்ய முயற்சித்ததாக பெண் ஒருவர் முன்னாள் மாவட்ட நீதிபதி மீது புகார் அளித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நிர்மலா என்பவர் தங்கும் விடுதி நடத்தி வருகிறார். கச்சேரிமேடு பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தை, முன்னாள் நீதிபதி பாரதி என்பவர் அபகரிக்க முயல்வதாக நிர்மலா குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில், தன்னை பொதுமக்கள் முன்னிலையில் ஆடைகளைக் களைந்து பாரதி அவமானப்படுத்தியதாக நிர்மலா குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், பாரதியின் மகள் மற்றும் மருமகன் நிர்மலா மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாரதி மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுக்கு ஆளான பாரதி 2004ஆம் ஆண்டு வேலூர் மாவட்டத்தில் நீதிபதியாக பணியாற்றியவர். ஊழல் புகாருக்கு ஆளாகி அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. நிர்மலாவின் புகாரை முன்னாள் நீதிபதி பாரதி மறுத்துள்ளார்.