\
சபாநாயகர் ஜே.டி.சி பிரபாகர்
சபாநாயகர் ஜே.டி.சி பிரபாகர்Pt

'சபாநாயகர் மிகவும் நடுநிலையோடு செயல்படுகிறார்..' முன்னாள் திமுக அமைச்சர் புகழாரம்!

சபாநாயகர் ஜே சி டி பிரபாகர் மிகவும் நடுநிலையோடு செயல்படுவதாக முன்னாள் திமுக அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பாராட்டியுள்ளார்.
Published on
Summary

சபாநாயகர் பிரபாகரின் நடுநிலை செயல்பாட்டை புகழ்ந்த பி டி ஆர், சட்டப்பேரவையில் அரசியல் சண்டைகளை தவிர்த்து ஆக்கபூர்வமான விவாதங்கள் அவசியம் என கூறுகிறார். தணிக்கை அறிக்கைகள் கவர்னர் ஒப்புதலுடன் அவையில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும், இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து தலைமை முடிவு செய்யும் என்றும், தனது தொகுதி வளர்ச்சிக்காக முஸ்தபா பாடுபட வேண்டும் எனவும் அவர் கருத்து தெரிவிக்கிறார்.

தற்போதைய சபாநாயகர் ஜே சி டி பிரபாகர் மிகவும் நடுநிலையோடு செயல்படுவதாகவும், வரலாற்றில் அவருக்கென்று ஒரு தனி இடம் கிடைக்கும் எனவும் முன்னாள் நிதித்துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

சபாநாயகர் ஜே.டி.சி பிரபாகர்
சபாநாயகர் ஜே.டி.சி பிரபாகர்Pt weh

புதிய தலைமுறைக்கு அவர் அளித்த பேட்டியில், அதிகாரிகள் தயார் செய்த பட்ஜெட்டை வாசித்து நேரம் விரயம் செய்வதை விட அதை அவை குறிப்பில் பதிவு செய்துவிட்டு அது குறித்து விவாதம் செய்வது இனி வரும் காலங்களில் நன்றாக இருக்கும்..

மானிய கோரிக்கை நேரங்களில் கொள்கை விளக்க குறிப்புகளை அமைச்சர்கள் படிப்பதில்லை, அவை குறிப்பில் படித்ததாக பதிவு செய்கிறார்கள் அதேபோலவே” என கூறினார்.

முதலமைச்சர் தன்னிடம் உள்ள ஆய்வு அறிக்கை குறித்து வெளியிடுவேன் என்று சொன்னது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், மத்திய அரசு எடுக்கும் தணிக்கை அறிக்கையை கவர்னர் ஒப்புதல் பெற்று சட்டப்பேரவையில் மட்டுமே அரசாங்கத்தால் தாக்கல் செய்ய முடியும். கடந்த காலங்களில் அவ்வாறுதான் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மான்டன்சிங் அலுவாலயா தலைமையில் குழு அமைத்துள்ளார்கள்.. வரவேற்கிறோம்.. ஆனால் அவர் மிகவும் வயதானவர் இன்னும் சில குழுக்களை கூட அரசு நியமிக்கலாம்.. நாங்களும் ரகுராம் ராஜன் தலைமையில் குழு அமைத்தோம்.. சட்டப்பேரவையில் ஆக்கபூர்வமான விவாதங்களை மேற்கொள்ள வேண்டும் அரசியல் சண்டைகளை தவிர்க்க வேண்டும்..

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்Pt web

இடைத்தேர்தலில் தான் போட்டியிடுவது குறித்து தலைமை தான் முடிவு எடுக்க வேண்டும்.. என்னை வீழ்த்தி வெற்றி பெற்ற முஸ்தபா கடந்த காலங்களில் தற்போதைய முதலமைச்சரை கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார் தவறான தகவல்களை தருவதை விட்டுவிட்டு தொகுதி வளர்ச்சிக்காக அவர் பாடுபட வேண்டும் என்று பேசினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com