\
திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி மருத்துவமனையில் அனுமதி

திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி மருத்துவமனையில் அனுமதி

திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி மருத்துவமனையில் அனுமதி
Published on

திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நெருங்கிய நண்பரும், திமுக முன்னாள் அமைச்சருமான ஆற்காடு வீராசாமி வயது மூப்பின் காரணமாக சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்

இந்நிலையில், அவர் சக்கர நாற்காலியில் இருந்து எழு முயற்சித்தபோது, தவறி விழுந்தில் கால் எலும்பில் சிறு முறிவு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆற்காடு வீராசாமியின் காலில் சிறு அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ள நிலையில், தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com