கோவை முன்னாள் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் விபரீத முடிவு

கோவை மேற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் பையா கவுண்டர் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 65.
பையா கவுண்டர் என்கிற கிருஷ்ணன்
பையா கவுண்டர் என்கிற கிருஷ்ணன் புதிய தலைமுறை

செய்தியாளர் : பிரவீண்

ஒளிப்பதிவாளர் : முத்துப்பாண்டி 

திமுக-வின் கோவை மேற்கு மாவட்ட முன்னாள் செயலாளரான பையா கவுண்டர் என்கிற கிருஷ்ணன் காளப்பட்டி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு இறந்துள்ளார். அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பையா கவுண்டர் என்கிற கிருஷ்ணன்
பையா கவுண்டர் என்கிற கிருஷ்ணன்

இந்நிலையில் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து கோவில்பாளையம் காவல்துறையினர் விசாரணையை துவக்கியுள்ளனர். இவர் காளப்பட்டி பேரூராட்சியின் முன்னாள் தலைவராக இருந்தவர் என்பதும் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பையா கவுண்டர் என்கிற கிருஷ்ணன்
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகனின் மருமகள் உயிரிழப்பு.. என்ன நடந்தது?

இவரது கட்சி பதவி கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு பறிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வந்தார். இவ்வாறான சூழலில் கிருஷ்ணனின் உயிரிழப்பு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com