கத்தியுடன் கைது செய்யப்பட்டவருக்கு சீர்வரிசை வழங்கிய ஓ.பி.எஸ்

கத்தியுடன் கைது செய்யப்பட்டவருக்கு சீர்வரிசை வழங்கிய ஓ.பி.எஸ்

கத்தியுடன் கைது செய்யப்பட்டவருக்கு சீர்வரிசை வழங்கிய ஓ.பி.எஸ்
Published on

திருச்சியில் தன்னை காண கத்தியுடன் வந்த சவரத் தொழிலாளியின் மகள் திருமணத்திற்கு ஓ.பி.எஸ் கட்டில், பீரோ, வீட்டு உபயோக பொருட்கள் அடங்கிய சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

கடந்த 6ஆம் தேதி திருச்சியில் முன்னாள் முதல்வரை சந்திக்க கத்தியுடன் வந்த சோலைராஜா என்ற சவரத்தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர். இதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அவர் அதிமுக தொண்டர் என்பதும் திருச்சி வந்த ஓபிஎஸ்-சை சந்தித்து தன் மகள் திருமணத்திற்கு உதவி கேட்க வந்ததும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு எதுவும் பதியாமல் அவரை விடுவித்தனர். இந்த செய்தியை அறிந்த ஓபிஎஸ், திருச்சி சவரத்தொழிலாளியை பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டிற்க்கு வரவழைத்து அவரின் மகள் திருமணத்திற்கு தேவையான கட்டில், பீரோ, மெத்தை, வீட்டு உபயோக பாத்திரங்கள் மற்றும் திருமண செலவிற்கான பணம் ஆகியவற்றை கொடுத்து வழி அனுப்பி வைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com