தமிழ்நாடு
கருணாநிதி உருவப்படம் திறப்பு விழா: வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தலைமைச் செயலகம்
கருணாநிதி உருவப்படம் திறப்பு விழா: வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தலைமைச் செயலகம்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவப்படம் திறப்புவிழா நடைபெறவுள்ளதையொட்டி தலைமைச் செயலகம் வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது.
ஆகஸ்ட் 2ஆம் தேதி சட்டப்பேரவையில் கருணாநிதியின் முழு உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்க உள்ளார். கருணாநிதியின் முழு உருவப்படம் ராயப்பேட்டையில் உள்ள அரசு ஆர்ட்ஸ் ஓவியரால் வரையப்பட்டு தயார் நிலையில் இருக்கிறது.
உருவப்பட திறப்பு விழாவுக்கான ஏற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதனொரு பகுதியாக தலைமைச் செயலகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.