\
சிபிஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமன் கொரோனா பாதிப்பால் மரணம்

சிபிஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமன் கொரோனா பாதிப்பால் மரணம்

சிபிஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமன் கொரோனா பாதிப்பால் மரணம்
Published on

ராஜீவ்காந்தி கொலைவழக்கை விசாரித்த சிபிஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமன் கொரோனா பாதிப்பால் காலமானார்

சிபிஐ-யில் எஸ்.பி.யாக பணியாற்றிய ரகோத்தமன் (வயது 72), கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக சென்னை முகப்பேர் ப்ரண்ட்லைன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்பு சென்னை கே.கே நகரில் உள்ள வீட்டில் வசித்துவந்தார் ரகோத்தமன். இவர் ஊடக விவாதங்களில் பங்கேற்று கருத்துகளை கூறிவந்தவர்.  ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக 'மர்மம் விலகும் நேரம்' என்ற நூலை எழுதியுள்ளார் ரகோத்தமன்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com