சென்னை | டிப்பர் லாரி மீது மோதிய கார்... முன்னாள் அதிமுக எம்எல்ஏ உயிரிழப்பு

சாலை விபத்தில் பொன்னேரி அதிமுக முன்னாள் MLA ரவிக்குமார் உயிரிழந்தார். அவரது மனைவியும் திண்டுக்கல் முன்னாள் அதிமுக MLA-வுமான நிர்மலா படுகாயங்களுடன் சென்னை அரசு ஸ்டேன்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Former admk mla Ravikumar
Former admk mla Ravikumarpt desk

செய்தியாளர்: எழில் கிருஷ்ணா

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினர் ரவிக்குமார் (63), திருவள்ளூர் வடக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராகவும் இருந்து வந்துள்ளார். கடந்த 1991-96ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ரவிக்குமார், திண்டுக்கல் தொகுதியில் அப்போதைய சட்டமன்ற உறுப்பினரான நிர்மலாவை திருமணம் செய்து கொண்டார்.

Car accident
Car accidentpt desk

இந்த நிலையில், சென்னையில் மருத்துவம் படிக்கும் தனது மகள் ரவீனாவை கல்லூரியில் விட்டுவிட்டு காரில் மனைவி நிர்மலாவுடன் ஊர் திரும்பியுள்ளார். அப்போது மீஞ்சூர் வண்டலூர் வெளிவட்ட சாலையில், சீமாவரம் அருகே முன்னால் சென்ற டிப்பர் லாரி மீது கார் மோதியுள்ளது. இதில், பலத்த காயமடைந்த இருவரையும் மீஞ்சூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று பரிசோதனை செய்தனர்.

Former admk mla Ravikumar
அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான முறைகேடு வழக்கு – மீண்டும் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

அப்போது முன்னாள் எம்எல்ஏ ரவிக்குமார் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது மனைவி நிர்மலாவுக்கு சென்னை அரசு ஸ்டேன்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்துக்குள்ளான முன்னாள் எம்எல்ஏ ரவிக்குமார் கார்
விபத்துக்குள்ளான முன்னாள் எம்எல்ஏ ரவிக்குமார் கார்

இந்த சம்பவம் குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் ஓட்டுநர் இன்று விடுப்பு எடுத்துக் கொண்டதால் ரவிக்குமார் தானே காரை ஓட்டிச் சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com