தமிழ்நாடு
அதிமுக முன்னாள் எம்.பி ராஜா பரமசிவம் காலமானார்..!
அதிமுக முன்னாள் எம்.பி ராஜா பரமசிவம் காலமானார்..!
அதிமுக முன்னாள் எம்.பி. ராஜா பரமசிவம் காலமானார். அவருக்கு வயது 60.
புதுக்கோட்டை தொகுதி அதிமுக முன்னாள் எம்.பி ராஜா பரமசிவம். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவரின் உயிர் பிரிந்தது.
கடந்த 1998ஆம் ஆண்டு அதிமுக சார்பில் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு மக்களவைக்கு தேர்வானார். பின்னர் திமுகவிற்கு சென்று மீண்டும் அதிமுகவில் இணைந்த ராஜா பரமசிவம் இறுதியாக தீபா பேரவையில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.