உணவு டெலிவரி ‘ஸ்விகி’ பெயரைச் சொல்லி மோசடி

உணவு டெலிவரி ‘ஸ்விகி’ பெயரைச் சொல்லி மோசடி

உணவு டெலிவரி ‘ஸ்விகி’ பெயரைச் சொல்லி மோசடி
Published on

சென்னையில் ஸ்விகி நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி நூதன முறையில் ஏமாற்றப்பட்டதாக மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை முகப்பேரைச் சேர்ந்தவர் பிரசாத். இவர் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தனக்கு சமீபத்தில் அறிமுகமான சங்கர் என்பவர் ஸ்விகி நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றலாம் எனக்கூறி, தன்னை 3 இருசக்கர மோட்டார் வாகனங்கள் மற்றும் 3 ஆண்ட்ராய்டு அலைபேசிகளை வாங்கச் செய்ததாக தெரிவித்துள்ளார். 

மேலும், அதனை ஸ்விகி நிறுவனத்துடன் இணைத்துத் தருவதாகக் கூறி பெற்றுச் சென்றவர் எதுவும் செய்யவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது தனது வாகனங்களையும் அலைபேசிகளையும் நகை பறிப்புக்கு பயன்படுத்துவதாகக் கூறியதாகவும் தெரிவித்திருக்கிறார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுத்து, தனது உடைமைகளை 1eமீட்டுத் தரும்படி காவல்துறையிடம் பிரசாத் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com