கோவை: யானைகள் உயிரிழந்த இடத்தில் வன பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

கோவை: யானைகள் உயிரிழந்த இடத்தில் வன பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

கோவை: யானைகள் உயிரிழந்த இடத்தில் வன பாதுகாப்பு அதிகாரி ஆய்வு
Published on

கோவை அருகே ரயில் மோதி 4 யானைகள் உயிரிழந்த இடத்தில் வனபாதுகாப்பு அலுவலர் நேரில் ஆய்வு நடத்தினார்.

கோவை மாவட்டத்தில் மதுக்கரை வனசரக்கத்துக்கு உட்பட்ட வாளையாறு-எட்டிமடை ரயில்நிலையங்களுக்கு இடையில் அண்மையில் ரயில்மோதி 4 யானைகள் உயிரிழந்த இடத்தில் முதன்மை தலைமை வனப்பாதுகாப்பு அலுவலர் சேகர் குமார் நீரஜ், சுமார் 7 கிலோமீட்டர் நடந்தே சென்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது வனத்துறை சார்பில் தண்டவாளத்தை ஒட்டி கண்காணிப்பு கோபுரம் அமைக்க திட்டமிடப்படடுள்ள இடம், யானைகள் எந்த இடங்களில் எல்லாம் கடந்து செல்கின்றன என்பது குறித்து வனப்பணியாளர்கள், விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க சோலார் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், ரயில்வே நிர்வாகம் சார்பில் ஏற்கனவே உள்ள 9 பேருடன் கூடுதலாக 10 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை ஒருங்கிணைக்க 2 வனவர்கள் இரவு நேர பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com