சதுரகிரி மலைப்பாதையில் காட்டுத் தீ: பக்தர்கள் செல்ல வனத்துறை தடை

சதுரகிரி மலைப்பாதையில் காட்டுத் தீ: பக்தர்கள் செல்ல வனத்துறை தடை
சதுரகிரி மலைப்பாதையில் காட்டுத் தீ: பக்தர்கள் செல்ல வனத்துறை தடை

சதுரகிரி மலையில் காட்டுத் தீ பற்றி எரிவதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி மேலே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்படும்.

இந்நிலையில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கடந்த 13 நாட்களாக பக்தர்கள் கோவிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்ட நிலையில் பக்தர்கள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வந்தனர். இதையடுத்து இன்று புரட்டாசி மாதம் பிரதோஷம் மற்றும் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பக்தர்கள் கோவிலுக்குச் சென்று வர அனுமதி அளித்திருந்தனர்.

ஆனால், சதுரகிரி மலையில் கோயிலுக்கும் செல்லும் பாதைகளில் திடீர் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் பாதுகாப்பு கருதி இன்று பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டிருந்தது.

இன்று பிரதோஷத்தை முன்னிட்டு வருகை தந்த பக்தர்களுக்கு கோவிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்படாததால் அடிவார பகுதியிலேயே சாமி தரிசனம் செய்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com