’காட்டுப்பன்றிகளை சுட எங்களுக்கு அனுமதி கொடுங்கள்’ - திண்டுக்கல் விவசாயிகள் கோரிக்கை

’காட்டுப்பன்றிகளை சுட எங்களுக்கு அனுமதி கொடுங்கள்’ - திண்டுக்கல் விவசாயிகள் கோரிக்கை
’காட்டுப்பன்றிகளை சுட எங்களுக்கு அனுமதி கொடுங்கள்’ - திண்டுக்கல் விவசாயிகள் கோரிக்கை

தமிழக மலைப்பகுதியை ஒட்டியுள்ள மலையடிவாரங்களில் பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை சுட வனத்துறைக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டதற்கு திண்டுக்கல் விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

தமிழக மலைப்பகுதியை ஒட்டியுள்ள மலையடிவாரங்களில் பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை சுட வனத்துறைக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டது. இந்நிலையில், கேரளாவில் உள்ளது போல் காட்டுப்பன்றிகளை சுட விவசாயிகளுக்கு உரிமை வழங்காமல், திண்டுக்கல் மாவட்டம் உட்பட சில மாவட்டங்களை புறந்தள்ளியதற்காக விவசாயிகள் எதிர்ப்பு த


தமிழகம் முழுவதும் உள்ள மலைப்பகுதிகள் மற்றும் மலையடிவாரங்களில் பயிரிடப்படும் பயிர்களை, காட்டுபன்றிகள் தொடர்ந்து சேதப்படுத்துவதால். அதன் இனப்பெருக்கத்தை கட்டுக்குள் வைக்க, காட்டுப்பன்றிகளை சுட உத்தரவிட வேண்டும் என்று திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பூலத்தூரை சேர்ந்த கோகுல கிருஷ்ணன் என்பவர், மனுச்செய்திருந்தார்.

அந்த மனுமீது தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், காட்டுப்பன்றிகளை வனத்துறை அதிகாரிகள் சுட்டுக்கொல்ல திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ஓசூ+ர், கோவை, மதுரை, சேலம், ஹாசனூர், சத்தியமங்கலம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு மட்டும் அனுமதியளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


இதில் வழக்கு தொடுத்தவர் வசிக்கக்கூடிய கொடைக்கானல் உட்பட திண்டுக்கல் விருதுநகர், தேனி உட்பட மேலும் சில மாவட்டங்கள் விடுபட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும் கேரளாவில் பயிர்களை அழிக்கும் காட்டுப்பன்றிகளை சுட அந்த மாநில அரசு விவசாயிகளுக்கு நேரடி உரிமை வழங்கியுள்ளது.
ஆனால் தமிழகத்தில் காட்டுப்பன்றிகளின் தொல்லை இருந்தால், வனத்துறையில் உள்ள வனச்சரகருக்கு புகார் அளிக்க வேண்டும். வனசரகர் சம்பவ இடத்திற்கு வந்து அங்கேயே தங்கியிருந்து விவசாய நிலங்களுக்குள் வரும் காட்டுப்பன்றிகளை, காத்திருந்து சுட உரிமை வழங்கியிருப்பது, நடைமுறையில் சாத்தியமில்லாது.


எனவே கேரளாவில் உள்ளது போல் இங்கும் காட்டுப்பன்றிகளை விவசயிகளே சுடவும், காட்டுப் பன்றிகளால் பயிர்சேதம் ஏற்படும் தமிழகத்தில் விடுபட்டுள்ள மாவட்டங்களை இணைக்கவும் அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று மலைப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com