”வேடந்தாங்கல் சரணாலயத்தில் சுற்றளவு குறைக்கப்படவில்லை” - வனத்துறை விளக்கம்

”வேடந்தாங்கல் சரணாலயத்தில் சுற்றளவு குறைக்கப்படவில்லை” - வனத்துறை விளக்கம்

”வேடந்தாங்கல் சரணாலயத்தில் சுற்றளவு குறைக்கப்படவில்லை” - வனத்துறை விளக்கம்
Published on

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் 5கிமீ சுற்றளவு பரப்பு குறைக்கப்படுகின்றது என்பது மிகவும் தவறான கருத்து என வனத்துறை விளக்கம் அளித்துள்ளது.

30 ஏக்கர் பரப்பளவு கொண்ட வேடந்தாங்கல் பாதுகாக்கப்பட்ட பகுதியைச் சுருக்குவதற்குத் தமிழக அரசு முயற்சிப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இந்தத் தகவலைச் சுட்டிக்காட்டி அரசியல் கட்சித்தலைவர்கள், வன ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் 5கிமீ சுற்றளவு பரப்பு குறைக்கப்படுகின்றது என்பது மிகவும் தவறான கருத்து என வனத்துறை விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள வனத்துறை, 1998ம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழக அரசின் ஆணைப்படி, வேடந்தாங்கல் ஏரியைச் சுற்றியுள்ள 5கிமீ நிலப்பரப்பில் உள்ள தனியார் பட்டா நிலம், வருவாய் நிலங்களும் சரணாலயமாக அறிவிக்கை செய்யப்பட்டது.

இதில் வனநிலங்கள் ஏதும் இல்லை. மத்திய அரசு அனைத்து சரணாலயங்களையும் மையப்பகுதி, இடைநிலைப்பகுதி, சுற்றுச்சூழல் பகுதி என வகைப்பாடு செய்யக்கூறியுள்ளது. அதன்படி வேடந்தாங்கல் ஏரியைச் சுற்றியுள்ள 5கிமீ நிலப்பரப்பானது, 0-1 கிமீ மையப்பகுதியாகவும், 1-3 கிமீ பகுதி இடைநிலைப் பகுதியாகவும், 3-5 கிமீ பகுதி சுற்றுச்சூழல் பகுதி எனவும் வகைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனவே வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் 5கிமீ சுற்றளவு பரப்பு குறைக்கப்படுகின்றது என்பது மிகவும் தவறான கருத்து என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com