\
ஆனைமலை புலிகள் காப்பக பகுதி விடுதிகளில் தங்க தடை

ஆனைமலை புலிகள் காப்பக பகுதி விடுதிகளில் தங்க தடை

ஆனைமலை புலிகள் காப்பக பகுதி விடுதிகளில் தங்க தடை
Published on

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனத்துறைக்கு சொந்தமான விடுதிகளில் தங்க 2 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, அரையாண்டு தேர்வு விடுமுறைகளால் கடந்த சில நாட்களுக்கு முன் டாப்சிலிப், வால்பாறை, ஆழியார் போன்ற பகுதிகள் களைகட்டியிருந்தன. அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வனத்துறை விடுதிகளில் தங்கி சென்றனர். தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், வனத்துறைக்கு சொந்தமான சுமார் 45 விடுதிகளில் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலாப் பயணிகள் தங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முன்பதிவுக்கான தொகையை சுற்றுலாப் பயணிகளுக்கு திருப்பிக் கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com