டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை விரைவில் உயர உள்ளது.
வெளிநாட்டு மது பானங்களுக்கான வரியை உயர்த்தும் முடிவு சென்னையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இதன்படி டாஸ்மாக் எலைட் கடைகளில் மட்டும் விற்கப்படும் வெளிநாட்டு இறக்குமதி மதுபானங்களுக்கான ஆயத்தீர்வையை 12 சதவிதம் உயர்த்த முடிவெடுக்கப்பட்டது. தற்போது இறக்குமதி மதுபானங்களுக்கு 60 முதல் 62 சதவிகிதம் வரை ஆயத்தீர்வை விதிக்கப்பட்டு வருகிறது. இறக்குமதி மதுபானங்கள் விலை தற்போது ஆயிரத்து 990 ரூபாய் முதல் 21,130 ரூபாய் வரை விற்கப்பட்டுவருகிறது. மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நடவடிக்கையாக ஆயத்தீர்வை உயர்வு நடவடிக்கை பார்க்கப்படுகிறது