தமிழ்நாடு
கோவில் திருவிழாவில் குத்தாட்டம் போட்ட வெளிநாட்டு தம்பதி!
கோவில் திருவிழாவில் குத்தாட்டம் போட்ட வெளிநாட்டு தம்பதி!
தேக்கடியில் நடைபெற்ற திருவிழாவில், சுற்றுலா வந்திருந்த வெளிநாட்டு தம்பதிகள் ஆட்டம் போட்டு கொண்டாடினர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளியில் உள்ள துர்கா கணபதி பத்ரகாளி கோவிலில் திருவிழா நடந்து வருகிறது. இந்தத் திருவிழாவையொட்டி அகல்விளக்கு, முளைப்பாடி உள்ளிட்ட பல்வேறு அலங்கார ஊர்வலங்கள் நடைபெற்றன. ஊர்வலத்தில் கேரள பாரம்பரியமிக்க “செண்டை” மேளம் இசைக்கப்படுகிறது. இந்த திருவிழாவை காண சுற்றுவட்டாரப்பகுதியினர் மட்டுமின்றி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அவ்வாறு திருவிழாவை காண வந்த வெளிநாட்டு தம்பதியினர், கேரள செண்டை மேள இசைக்கேற்ப ஏற்ப ஜோடியாக நடனமாடி அசத்தினர். உள்ளூர் மக்களுடன் இணைந்து வெளிநாட்டு தம்பதியினரும் நடனமாடியது அனைவரையும் கவர்ந்தது.