முக்கிய ஆவணங்களை தொலைத்த ஃபோர்ட் கார் நிறுவனம்

முக்கிய ஆவணங்களை தொலைத்த ஃபோர்ட் கார் நிறுவனம்
முக்கிய ஆவணங்களை தொலைத்த ஃபோர்ட் கார் நிறுவனம்

பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்ட் சில முக்கிய ஆவணங்களை தொலைத்துவிட்டதாகவும் அதனைக் கண்டெடுப்பவர்கள் நிறுவனத்தில் ஒப்படைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டுக்கு அருகில் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்ட் அலுவலகம் உள்ளது. சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் அமைந்துள்ள அலுவலத்தின் பத்திரம் உள்ளிட்ட சில முக்கிய ஆவணங்கள் தொலைந்திருக்கிறது ஃபோர்ட். இதனையடுத்து அதனை கண்டெடுப்பவர்கள் தங்களிடம் ஒப்படைக்குமாறு ஃபோர்ட் நிறுவனம் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக ஃபோர்ட் நிறுவனம் பொது அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில் “சில முக்கிய ஆவணங்களை தொலைத்து விட்டோம். கண்டெடுப்பவர்கள் தங்களது முகவரியில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவித்துள்ளது. அல்லது 044-03532165 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com