தமிழ்நாடு
சென்னை: கொரோனா பாதித்த கர்ப்பிணிக்கு பிறந்த குழந்தை உயிரிழப்பு
சென்னை: கொரோனா பாதித்த கர்ப்பிணிக்கு பிறந்த குழந்தை உயிரிழப்பு
(கோப்பு புகைப்படம்)
கொரோனா பாதித்த பெண்ணுக்குப் பிறந்த குழந்தை பிறந்த சில நிமிடங்களில் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சூளையை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர் எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு இன்று பிரசவச வலி ஏற்பட்டதையடுத்து அவருக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. இதில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
ஆனால் பிறந்த சில நிமிடங்களிலேயே அக்குழந்தை இறந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து குழந்தைக்கு ஓமாந்தூரார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் குழந்தைக்கு கொரோனா தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது.