முதன்முறையாக தமிழ்த்தாய் வாழ்த்தில் தொடங்கி தேசிய கீதத்தில் நிறைவு பெற்ற மாமன்ற கூட்டம்!

முதன்முறையாக தமிழ்த்தாய் வாழ்த்தில் தொடங்கி தேசிய கீதத்தில் நிறைவு பெற்ற மாமன்ற கூட்டம்!
முதன்முறையாக தமிழ்த்தாய் வாழ்த்தில் தொடங்கி தேசிய கீதத்தில் நிறைவு பெற்ற மாமன்ற கூட்டம்!

நூற்றாண்டு கடந்த சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் முதன்முறையாக தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி தேசிய கீதத்துடன் நிறைவு பெற்றது.

சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் மேயர் தலைமையில் இன்று நடைபெற்றது. கடந்த மாதம் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில், தமிழ்நாடு குறித்து ஆளுநர் பேசிய கருத்தை கண்டித்துப் பேசிய மதிமுக மாமன்ற உறுப்பினர் ஜீவன், சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும், மாமன்றக் கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். அதற்கு, மேயர் பிரியா “வருகின்ற மாமன்றக் கூட்டம் முதல் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்படும்” என தெரிவித்தார்.

இந்நிலையில், நூற்றாண்டுகள் கண்ட சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் முதல்முறையாக இன்று தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இதையடுத்து பிப்ரவரி 16ஆம் தேதி உயிரிழந்த சென்னை மாநகராட்சி 122-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பா.வாசு அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அனைத்து கட்சிகளைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்களில் தலா ஒருவர் இரங்கலை பதிவு செய்தனர்.

இதையடுத்து `மாமன்ற உறுப்பினர்கள் பதவி காலத்தில் உயிரிழந்தால் இதுவரை குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டு வருவதை சிறப்பு தீர்மானம் இயற்றி 5 லட்சம் ரூபாயாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என துணை மேயர் மகேஷ் குமார் கோரிக்கை விடுத்தார். இதற்கு, `அரசின் ஆலோசனையை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்’ என மேயர் ப்ரியா ராஜன் பதிலளித்தார்.

அனைத்து கட்சிகளை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்களும் இரங்கல் தெரிவித்த பின்பு முதல்முறையாக தேசிய கீதம் இசைக்கப்பட்டு மாமன்ற கூட்டம் நிறைவடைந்தது. நாளை மறுநாள் மார்ச் 2 ஆம் தேதி மீண்டும் சென்னை மாநகராட்சி மாமன்றம் கூடுகிறது. அதில், பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது குறித்து அறிவிக்கப்படும் என மாமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com