\
பழனி பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் வசதிக்காக 14 இடங்களில் தங்கும் வசதி ஏற்பாடு

பழனி பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் வசதிக்காக 14 இடங்களில் தங்கும் வசதி ஏற்பாடு

பழனி பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் வசதிக்காக 14 இடங்களில் தங்கும் வசதி ஏற்பாடு
Published on
பழனிக்கு பாத யாத்திரையாக வரும் பக்தர்களின் வசதிக்காக, 14 இடங்களில் தங்கும் வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புத்தாண்டு மற்றும் தைப்பூசத்தையொட்டி, பழனிக்கு பாத யாத்திரையாக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், பக்தர்கள் வரும் பாதைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. திண்டுக்கல், பொள்ளாச்சி, செம்பட்டி வழியாக பழனிக்கு பாத யாத்திரையாக வரும் பக்தர்களின் வசதிக்காக, தர்மத்துப்பட்டி, கன்னிவாடி, ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி உள்பட 14 இடங்களில் தங்கும் கூடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பக்தர்கள் கட்டணம் இல்லாமல் இப்பகுதிகளில் தங்கிக் கொள்ளலாம் என்றும், நள்ளிரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை பாத யாத்திரையாக வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவில் பாத யாத்திரை மேற்கொள்ளும் போது ஒளிரும் பட்டை அணிந்து குழுவாக செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com