பிரசாதம் முதல் அன்னதானம் வரை பரிசோதிக்க மத்திய அரசு நடவடிக்கை
தமிழகத்தில் கோயில்களிலும் பள்ளி - கல்லூரிகளிலும் வழங்கப்படும் உணவுகள், தேசிய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் மக்களுக்கு தரமான உணவு கிடைப்பதை உறுதி செய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக உணவகங்கள், உணவு தயாரிப்பு மற்றும் விற்பனை மையங்கள் ஆகியவற்றை தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் கீழ் கொண்டு வந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்கள், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் ஆகியவையும் இந்தக் கட்டுப்பாட்டில் இணைக்கப்பட்டுள்ளது. இதன்படி, கோயில்களில் வழங்கப்படும் பிரசாதம், குடிநீர், அன்னதானம் வரை அனைத்தும் பரிசோதிக்கப்படும். கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். மேலும் துரித உணவுகளைத் தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட உள்ளது.