\
திருச்சி: சோதனையின்போது காணாமல்போன இருசக்கர வாகனம் - அதிகாரிகள் அதிர்ச்சி!

திருச்சி: சோதனையின்போது காணாமல்போன இருசக்கர வாகனம் - அதிகாரிகள் அதிர்ச்சி!

திருச்சி: சோதனையின்போது காணாமல்போன இருசக்கர வாகனம் - அதிகாரிகள் அதிர்ச்சி!
Published on

சோதனையில் இருந்த உணவு பாதுகாப்பு பிரிவு அதிகாரியின் வாகனம் காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருச்சி பொன் நகரை சேர்ந்தவர் பாண்டி. இவர் திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையில் சேப்டி ஆபீஸராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை உணவு பாதுகாப்புத் துறையினர் ஸ்ரீரங்கத்தில் உள்ள பல்வேறு கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை செய்தனர். சோதனை முடித்துவிட்டு சென்று பார்த்தபோது ராஜகோபுரம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாண்டியின் இருசக்கர வாகனம் காணாமல் போயிருந்தது.

இதுகுறித்து அவர் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த போலீசார் அந்த இரு சக்கர வாகனத்தை பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தினர் எடுத்து சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com