உணவு டெலிவரி செய்வதுபோல நோட்டமிட்டு கொள்ளை;  50 கேமராக்களை ஆய்வு செய்து மடக்கிய போலீஸ்

உணவு டெலிவரி செய்வதுபோல நோட்டமிட்டு கொள்ளை; 50 கேமராக்களை ஆய்வு செய்து மடக்கிய போலீஸ்

உணவு டெலிவரி செய்வதுபோல நோட்டமிட்டு கொள்ளை; 50 கேமராக்களை ஆய்வு செய்து மடக்கிய போலீஸ்
Published on

உணவு டெலிவரி செய்வதுபோல நடித்து செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை முகப்பேர் கிழக்கு, புகழேந்தி சாலையை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி லதா (52). ராஜேந்திரன் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 21-ம் தேதி மளிகை கடைக்கு சென்ற லதாவிடம் 2 மர்ம நபர்கள், 11 பவுன் தாலி செயினை பறித்துச் சென்றனர்.



இதனையடுத்து ஜெ.ஜெ நகர் காவல்நிலையத்தில் லதா புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் திருமங்கலம் உதவி கமிஷனர் சிவகுமார், சப் இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை பிடிக்க உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து தனிப்படை போலீசார் ஜெஜெ நகர் பகுதியில் இருந்து ஆவடி வரை சுமார் 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில் வேலூரைச் சேர்ந்த கோபி (35) மற்றும் ஆவடியை சேர்ந்த சிவனேசன் (20) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் இருவரும் உணவு டெலிவரி செய்யும் பணி செய்து வந்ததும், போதிய வருமானம் இல்லாததால் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க அப்பகுதியில் உள்ள வீடுகளை நோட்டமிட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது.

லதாவிடம் செயின் பறிப்பதற்கு முன்னரே அதற்கான திட்டத்தை அவர்கள் தீட்டியுள்ளனர். முதலில் லதாவின் வீடு அருகே உள்ள டீக் கடையில் தேநீர் அருந்துவது போல 3 நாட்கள் அவரின் செயல்பாடுகளை கவனித்துள்ளனர். அதன் பின்னர் சரியான நேரம் பார்த்து கழுத்தில் இருந்த 11 சவரன் தாலி செயினை பறித்துள்ளனர். இந்நிலையில் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மத்திய சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com