கொல்லங்குடி கருப்பாயி காலமானார்pt desk
தமிழ்நாடு
நாட்டுப்புற பாடகியும் நடிகையுமான கொல்லங்குடி கருப்பாயி காலமானார்!
நாட்டுப்புற பாடகி கொல்லங்குடி கருப்பாயி (99) வயது முதிர்வு காரணமாக காலமானார்.
பல நாட்டுப்புற பாடல்களை பாடி தமிழக ரசிகர்களின் இதயங்களில் இடம்பித்தவர் கொல்லங்குடி கருப்பாயி, ஆண்பாவம், கோபாலா கோபாலா, ஆயுசு நூறு உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நாட்டுப்புற பாடகியும், நடிகையுமான கொல்லங்குடி கருப்பாயிக்கு கடந்த 1993ம் ஆண்டு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது. நமது செய்தியாளர் நாசர் தரும் கூடுதல் தகவல்களை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காண்க..