உதகையில் புல்வெளியை போர்வையாக மூடிய பனி: புகைப்பட கேலரி
உதகை குன்னூர் போன்ற பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காரணமாக பகல் நேரத்திலேயே தீ மூட்டி குளிர் காயும் நிலை ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கடந்த ஒரு வாரமாக பனிப்பொழிவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பொதுவாக உதகையை விட குன்னுாரில், பனிப்பொழிவின் தாக்கம் குறைவாக இருக்கும். ஆனால், நடப்பாண், நவம்பர் மாதத்தில் இருந்து குன்னுாரில் பனிப்பொழிவு காணப்பட்டது. தற்போது, காலை, மாலை நேரங்களில் பனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில், லேம்ஸ்ராக், டால்பினோஸ், தொட்டபெட்டா உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களிலும் பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுவதால் காட்சி முனைகளை காண முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்து வருகின்றனர். குறிப்பாக, இங்குள்ள புல்வெளியில், வெள்ளை போர்வை போர்த்தியது போன்று பனி காணப்படுகிறது. பனியின் தாக்கத்தில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள பகல் நேரங்களிலேயே நெருப்பு மூட்டி குளிர்காயும் நிலை ஏற்பட்டுள்ளது.