முழு ஊரடங்கு காரணமாக சென்னையில் மூடப்பட்ட மேம்பாலங்கள்

முழு ஊரடங்கு காரணமாக சென்னையில் மூடப்பட்ட மேம்பாலங்கள்
முழு ஊரடங்கு காரணமாக சென்னையில் மூடப்பட்ட மேம்பாலங்கள்

இன்றைய தினம் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் சென்னையின் முக்கியமான மேம்பாலம் கோயம்பேடு, ஜெமினி, கத்திப்பாரா தவிர பிற மேம்பாலங்கள் மூடப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் காவல்துறையினர் தீவிர வாகன கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்படி வடபழனி, தி.நகர், ஆழ்வார்பேட்டை, புரசைவாக்கம், பல்லாவரம், மீனம்பாக்கம் உள்ளிட்ட சில மேம்பாலங்கள் பாதுகாப்பு காரணமாக மூடப்பட்டுள்ளது. பணிக்கு செல்லும் மாநகராட்சி, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட முன்கள பணியாளர்களின் அடையாள அட்டை சோதனை செய்யப்பட்டது. அதேபோல் பொதுமக்கள் அவசர மருத்துவ தேவைக்கு செல்பவர்கள், குடும்ப நிகழ்வுக்கு செல்பவர்கள் ஆவணம் வைத்திருக்க வேண்டும். அதன்படி காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.



சென்னை மற்றும் தாம்பரம், ஆவடி காவல் ஆணையர் எல்லைக்கு உட்பட்டு 372 இடத்தில் வாகன தணிக்கை நடந்துள்ளது. விதிகளை மீறும் வாகன ஒட்டிகளிடம் அபராதம், வாகனத்தை பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com