தமிழ்நாடு
பூத்துக் குலுங்கும் மலர்கள்: குன்னூரில் குவியும் சுற்றுலா பயணிகள்
பூத்துக் குலுங்கும் மலர்கள்: குன்னூரில் குவியும் சுற்றுலா பயணிகள்
நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூத்து குலுங்கும் புதிய மலர்களை காண சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
2வது சீசனுக்கு சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் 2 லட்சம் மலர் செடிகள் நடவு செய்து பூங்கா நிர்வாகம் பராமரித்து வந்தது. இந்த செடிகளில் தற்போது பூக்கள் பூக்க துவங்கி உள்ளதாலும், அவ்வப்போது சாரல் மழை பெய்து வருவதாலும் குளுகுளு சீசனை அனுபவிக்க தற்போதே சுற்றுலா பயணிகள் தயாராகி வருகின்றனர். ஏராளமான சுற்றுலா பயணிகள் மலர்கள் முன்னால் குடும்பத்துடன் நின்று ஆனந்தமாய் செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.
இமயமலையில் காணப்படும் அரிய வகை ருத்ராட்ச காய்கள் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பச்சை பசேல் என கொத்து கொத்தாய் மரங்களில் காய்த்து தொங்குவதை காணவும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வருகை தருகின்றனர்.