\
இடுகாட்டை சூழ்ந்த வெள்ளம் - திறந்த வெளியில் சடலத்தை எரியூட்டிய அவலம்

இடுகாட்டை சூழ்ந்த வெள்ளம் - திறந்த வெளியில் சடலத்தை எரியூட்டிய அவலம்

இடுகாட்டை சூழ்ந்த வெள்ளம் - திறந்த வெளியில் சடலத்தை எரியூட்டிய அவலம்
Published on

பூவிருந்தவல்லியில் இடுகாட்டில் மழை நீர் சூழ்ந்ததால், திறந்தவெளியில் சடலத்தை எரிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியம் குத்தம்பாக்கம் கிராமம் இருளபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (97). இவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், அவரது உடலை உறவினர்கள் இருளபாளையம் இடுகாட்டிற்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அண்மையில் பெய்த மழையால் காரணமாக இடுகாடு முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்திருந்தது. இதனால் பிரேதத்தை எரிமேடையில் வைத்து எரிக்க முடியாமல் எரிமேடை அருகே வைத்து இறுதி சடங்கு நடத்தி எரிக்கும் சூழல் ஏற்பட்டது. வெள்ள நீர் வடியாததால், இறுதிச்சடங்கை கூட நிம்மதியாக செய்ய முடியாததை எண்ணி அவர்கள் வேதனை அடைந்தனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com